என் ஓட்டு ரஜினி கட்சிக்குத் தான் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'பேட்ட'. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி இணையவில்லை.
ஆனால், கார்த்திக் சுப்புராஜ் தீவிரமான ரஜினி ரசிகர். இதனை பல்வேறு பேட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ரஜினி அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும், எப்போது என்பதற்கான அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதி வெளியிடவுள்ளதாகத் தெரிவித்தார். இதற்கு கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள வெப் சீரிஸ் 'ட்ரிப்ள்ஸ்'. இதனை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் "ரஜினியை வைத்து மீண்டும் படம் இயக்குவீர்களா?" என்ற கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாவது:
» சாந்தனுவுக்கு ‘சுப்ரமணியபுரம்’, ‘களவாணி’ வாய்ப்புகள் நழுவியது ஏன்? - மனம்திறக்கும் பாக்யராஜ்
» ‘ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா’ வசனம் உருவானது எப்படி? - கே.பாக்யராஜ் பகிர்வு
"தலைவர் வந்து பெரிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மீண்டும் அவரோடு படம் பண்ணுவேனா என்று தெரியாது. கண்டிப்பாக அவருக்கு ஓட்டுப் போடுவேன். அதற்குத் தயாராக இருக்கிறோம். தலைவர் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என அறிவித்ததில் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது"
இவ்வாறு கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago