'மாமன் மகள்' படத்தில் பெண் வேடமிட்டு நடித்தபோது, பெண்கள் தினசரி இவ்வளவு நகைகளையா அணிகிறார்கள் என்று சத்யராஜ் ஆச்சரியப்பட்டுள்ளார்.
குரு தனபால் இயக்கத்தில் சத்யராஜ், மீனா, கவுண்டமணி, மணிவண்ணன், ஜெயசித்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாமன் மகள்'. 1995-ம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் சத்யராஜ் - கவுண்டமணி - மணிவண்ணன் மூவரின் நகைச்சுவைக் காட்சிகள் இப்போதும் ரசிக்கப்பட்டு வருகின்றன.
இன்றுடன் (டிசம்பர் 4) 'மாமன் மகள்' படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் இப்படத்தின் பல்வேறு காட்சிகளைத் தங்களுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
'மாமன் மகள்' படத்தில் மீனாவை ஏமாற்றுவதற்காக சத்யராஜ் பெண் வேடமிட்டு நடித்திருப்பார். அதன் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மீனா கூறியிருப்பதாவது:
"'மாமன் மகள்' வெளியாகி 25 வருடங்கள். இந்தப் படத்தில் வந்த பிரபலமான காட்சி இது. சத்யராஜ் இந்த காட்சிக்காகத் தயாராவதைப் பார்த்து நான் வாய்விட்டுச் சிரித்தது இன்றும் நினைவில் இருக்கிறது. பெண்கள் தினசரி இவ்வளவு ஒப்பனை, நகைகள் அணிகிறார்கள் என்பதை நினைத்து அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார்".
இவ்வாறு மீனா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago