'அந்தாதூன்' மலையாள ரீமேக்கில் பிரித்விராஜ்?

By செய்திப்பிரிவு

'அந்தாதூன்' படத்தின் மலையாள ரீமேக்கில் பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது.

இந்தப் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தெலுங்கில் நிதின், தபு, நபா நடேஷ் உள்ளிட்டோர் நடிக்க மெர்லபாகா காந்தி இயக்கவுள்ளார்.

தமிழில் பிரசாந்த் நடிக்க ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். தபு மற்றும் ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 'அந்தாதூன்' படத்தின் மலையாள ரீமேக் முடிவாகியுள்ளது. ரவி கே.சந்திரன் இயக்கவுள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரித்விராஜை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தபு கதாபாத்திரத்தில் மம்தா மோகன்தாஸ், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் அஹானா கிருஷ்ணா ஆகியோர் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு ரீமேக்குகளைத் தொடர்ந்து, விரைவில் 'அந்தாதூன்' மலையாள ரீமேக்கும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்