‘பேட்மேன்’ படத்தில் மோசமாக நடித்திருந்தேன் - ஜார்ஜ் க்ளூனி வெளிப்படை

By ஐஏஎன்எஸ்

1997ஆம் ஆண்டு வெளியான படம் ‘பேட்மேன் & ராபின்’. இப்படத்தில் பேட்மேனாக ஜார்ஜ் க்ளூனி நடித்திருந்தார். இப்படத்தில் வில்லனாக மிஸ்டர் ஃப்ரீஸ் என்ற கதாபாத்திரத்தில் அர்னால்ட் நடித்திருந்தார். பாய்ஸன் ஐவி என்ற கதாபாத்திரத்தில் உமா துர்மேன் நடித்திருந்தார். ஹாலிவுட்டின் பிரபல நடிகர்கள், பெரிய பட்ஜெட், பேட்மேன் கதாபாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருந்தாலும் இப்படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. இதுவரை வெளியானதில் மிக மோசமான பேட்மேன் படம் என்று இன்று வரை இப்படம் விமர்சிக்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ‘பேட்மேன் & ராபின்’ திரைப்படத்தின் தான் மிகவும் மோசமாக நடித்திருந்ததாக நடிகர் ஜார்ஜ் க்ளூனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

நான் அப்படத்தில் மோசமாக நடித்திருந்தேன். அப்படமும் மோசமான திரைப்படம் தான். அதற்கு நானே பொறுப்பு. ‘பேட்மேன் & ராபின்’ நடிக்க வேண்டுமென்றால் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். ஆனால் நான் அப்படி நடக்கவில்லை. பின்னர் தான் அதனை உணர்ந்து கொண்டேன்.

அன்று முதல் படம் முக்கியமல்ல, கதை தான் முக்கியம் என்பதை புரிந்து கொண்டேன். எனவே அதன் பிறகு ‘அவுட் ஆஃப் சைட்’ படத்தில் நடித்தேன். அதன் ‘த்ரீ கிங்ஸ்’ படத்தின் நடித்தேன். ‘பேட்மேன்’ சிறந்த படம் அல்ல என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால் அப்படத்திலிருந்து தான் என்னால் பாடம் கற்றுக் கொள்ள முடிந்தது. என்னுடைய சினிமா வாழ்க்கை முடிந்து விடாமல் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.

அப்படத்தின் படப்பிடிப்புமே கூட சிறப்பானதாக அமையவில்லை. படத்தின் இயக்குநர், சக நடிகர்கள் என அனைவருமே எனக்குப் பிடித்தவர்கள் தான். ஆனால் அப்போது அனைவருமே டென்ஷனில் இருந்தோம். ஏறக்குறைய எட்டு மாதங்கள் படப்பிடிப்பு நீடித்தது.

இவ்வாறு ஜார்ஜ் க்ளூனி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE