பிரபாஸ் நடித்த 'சத்ரபதி' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. பிரபாஸ் கதாபாத்திரத்தில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்கவுள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த முதல் படம் 'சத்ரபதி'. 2005-ம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகு 10 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து பணியாற்றிய படம் தான் 'பாகுபலி'. தற்போது 'சத்ரபதி' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.
தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து வருபவர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ். தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ராட்சசன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகனாக நடித்திருந்தார். அதுவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. சில மாதங்களாகவே இந்தியில் அறிமுகமாக கதைகள் கேட்டு வந்தார்.
இறுதியில், பிரபாஸ் நடித்த 'சத்ரபதி' படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகனாக நடித்து இந்தியில் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. வி.வி.விநாயக் இயக்கவுள்ளார். இவர் தான் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடித்த முதல் படமான 'அல்லுடு சீனு' படத்தை இயக்கினார்.
தெலுங்கில் நாயகனாக அறிமுகப்படுத்திய வி.வி.விநாயக்கே, இந்தியிலும் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸை நாயகனாக அறிமுகப்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago