தெலுங்கில் உருவாகவுள்ள 'கப்பேலா' ரீமேக்கில் அனிகா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முகம்மது முஸ்தபா இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'கப்பேலா'. விஷ்ணு வேணு தயாரித்துள்ள இந்தப் படத்தில் அன்னா பென், ஸ்ரீநாத் பாஸி, ரோஷன் மேத்யூ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், கரோனா ஊரடங்கினால் பலர் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை.
அதனைத் தொடர்ந்து ஜூன் 22-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்குப் பிறகு பலரும் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். அனுராக் காஷ்யப் தொடங்கி பல்வேறு முன்னணி நடிகர்களும் இந்தப் படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர்.
இந்தப் படத்துக்குக் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தெலுங்கு ரீமேக் உரிமையை சித்தாரா என்டர்டையின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியது. இயக்குநர், நடிகர், நடிகைகள் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
» பிஹாரிலிருந்து மும்பைக்கு சைக்கிளில் விரைந்த ரசிகர்: விமானம் வைத்து அழைத்து வந்த சோனு சூட்
» விரைவில் சகஜ நிலை: சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாதவன் பாராட்டு
இதில் அன்னா பென் கதாபாத்திரத்தில் நடிக்க அனிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. பல்வேறு படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், நாயகியாக இன்னும் அனிகா அறிமுகமாகவில்லை. மேலும், நேரடித் தெலுங்குப் படத்திலும் இதுவரை நடித்ததில்லை.
இதனால், அனிகா பார்வையாளர்களுக்குப் புதிதாகவும், பொருத்தமாகவும் இருப்பார் என்று படக்குழு கருதியுள்ளது. ஸ்ரீநாத் பாஸி, ரோஷன் மேத்யூ ஆகிய கதாபாத்திரங்களுக்குச் சில முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இயக்குநர் உள்ளிட்டவை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago