மாதம்பட்டி ரங்கராஜ் - வாணி போஜன் இணையும் கேசினோ

By செய்திப்பிரிவு

மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் இணைந்து நடித்துவரும் படத்துக்கு 'கேசினோ' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அதற்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'பெண்குயின்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நாயகனாக நடிப்பதற்குப் பல்வேறு கதைகளையும் கேட்டு வந்தார்.

இறுதியில் மார்க் ஜோயல் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதில் நாயகியாக வாணி போஜன் நடித்து வருகிறார். இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் 'சச்சின்' படத்தின் இயக்குநர் ஜான் மகேந்திரன். இதன் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகிறார்.

'கேசினோ' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (நவம்பர் 26) வெளியிடப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளராக விக்னேஷ் ஜே.கே, இசையமைப்பாளராக ஸ்டான்லி சேவி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

54 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்