எனிமி அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

விஷால் - ஆர்யாவுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'எனிமி' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக நேற்று (நவம்பர் 25) மாலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

தனுஷின் பழைய மேலாளரான வினோத் தயாரித்து வரும் இந்தப் படத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடைய காட்சிகள் டிசம்பர் மாதத்தில் படமாக்கப்படவுள்ளன. தற்போது விஷால் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறது படக்குழு.

'அரண்மனை 3' படப்பிடிப்பை முடித்துவிட்டு ஆர்யா திரும்பியவுடன், விஷாலுக்கும் அவருக்குமான காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஊட்டியில் படமாக்கவுள்ளது படக்குழு. ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்