'ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் ஜானி டெப்புக்கு பதிலாக, மேட்ஸ் மிக்கெல்ஸன் நடிப்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்ட் வேர் டு ஃபைண்ட் தெம்', ஹாரிபாட்டர் பிறப்பதற்கு முன்பு மந்திர உலகில் நடக்கும் கதையாக எழுதப்பட்டது. க்ரிண்டெல்வால்ட் என்கிற மந்திரவாதியின் சூழ்ச்சிகளைப் பற்றி சொல்லும் இந்தப் படத்தின் மூன்றாவது பாகத்தில் க்ரிண்டெல்வால்ட் கதாபாத்திரத்தில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் ஜானி டெப் தான் முதலில் நடித்து வந்தார். முதல் இரண்டு பாகங்களிலும் இவரே நடித்தார்.
ஆனால், தன் முன்னாள் மனைவிக்கு எதிரான அவதூறு வழக்கில் தோற்ற ஜானி டெப், முன்னாள் மனைவியைத் தாக்கியிருப்பதாகவும் செய்திகள் வந்து பெரிய பரபரப்பை உண்டாக்கின. ஒரு செய்தித்தாள், மனைவியை அடித்தவர் என்றே பட்டம் வைத்து ஜானி டெப்பைக் குறிப்பிட்டது. இதனால் 'ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ், ஜானி டெப்பை படத்திலிருந்து விலகச் சொல்லிக் கேட்டுக்கொண்டது.
தொடர்ந்து வேறொரு நடிகருக்கான தேடல் ஆரம்பித்தது. கடந்த வாரம் மேட்ஸ் மிக்கெல்ஸன் நடிப்பார் என்று செய்திகள் வந்தாலும், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதால், இந்தச் செய்திகள் வெறும் புரளிகளே என்று மிக்கெல்ஸன் கூறினார். தற்போது மிக்கெல்ஸன் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இவர் ஏற்கெனவே 'கேஸினோ ராயல்', 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்', 'ரோக் ஒன் ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர். 'ஹானிபால்' என்கிற தொடரின் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். ஜானி டெப் அளவு நட்சத்திர அந்தஸ்து இல்லையென்றாலும் மிக்கல்ஸெனின் தேர்வு சரியே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மூன்றாம் பாகத்துக்காக ஜானி டெப் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே இதுவரை நடித்துள்ளார் என்பதால் தயாரிப்பில் பெரிதாக எந்த பாதிப்போ தாமதமோ இருக்காது என்று தெரிகிறது. ஆனால், தயாரிப்புத் தரப்பே அவரை விலகச் சொன்னதால், அவர் நடிக்கவில்லையென்றாலும் ஒப்பந்தப்படி 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை சம்பளமாகப் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago