விஷால் - ஆர்யா இணைந்து நடிக்கும் படத்துக்கு 'எனிமி' என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு.
'சக்ரா' படத்தை முடித்துவிட்டு, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் முடித்துவிட்டுத் திரும்பியுள்ளது படக்குழு. இப்படத்தின் தலைப்பு இன்று (நவம்பர் 25) மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது.
அவ்வாறு மாலை 5 மணிக்கு விஷால் - ஆர்யா இருவருமே தாங்கள் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'எனிமி' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இருவருமே 'அவன் இவன்' படத்துக்குப் பிறகு இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.
மிருணாளினி, கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் 'எனிமி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தனுஷின் பழைய மேலாளரான வினோத் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.
ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். முதற்கட்டப் படப்பிடிப்பில் விஷாலின் காட்சிகளை மட்டுமே படமாக்கியது படக்குழு. விரைவில் விஷால் - ஆர்யா இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளைப் படமாக்கத் தயாராகி வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago