திரைக்கலைஞர்களுக்கு ரோபோ ஷங்கர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தவசி மறைவு தொடர்பாக, திரைக்கலைஞர்களுக்கு ரோபோ ஷங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி நேற்று (நவம்பர் 23) காலமானார். அவருடைய சிகிச்சைக்கு ரஜினி, சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலரும் உதவி செய்தார்கள். ஆனால் புற்றுநோயின் தீவிரத்தால் அவருடைய உடல் மிகவும் நலிவுற்று, சிகிச்சை பலனின்றி காலமானார்.

சில தினங்களுக்கு முன்பு தான் நடிகர் தவசியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ரோபோ ஷங்கர். தவசியிடம் ரோபோ ஷங்கர் பேசிய வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்ட்டானது. தற்போது தவசி மறைவு குறித்து ரோபோ ஷங்கர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"தவசி அண்ணனைப் பார்த்துவிட்டு வந்த கடைசி ஆள் நான் தான். அதற்குப் பிறகு யார் பார்த்தார்கள் என்று தெரியாது. அவருக்கு நிறைய கலைஞர்கள் உதவி செய்துள்ளீர்கள். அனைவருக்கும் நன்றி. தவசி அண்ணன் இறந்த செய்தியைக் கேட்டவுடன் ரொம்ப கஷ்டமாகிவிட்டது. இப்போது தானே பார்த்துவிட்டு வந்தோம், ஐ யம் பேக் எல்லாம் சொன்னாரே என நினைத்தேன்.

தயவு செய்து நம்ம திரைக்கலைஞர்களுக்கு நமது துறையைச் சார்ந்தவர்கள் முடிந்தளவுக்கு உதவி செய்யுங்கள். அதுவே அவர்களுக்குப் பெரிய விஷயமாக இருக்கும். தவசி அண்ணன் முதலிலேயே கவனித்திருந்தால் கண்டிப்பாக ஜெயித்திருப்பார். ப்ளீஸ் உதவி செய்யுங்கள். யாராக இருந்தாலும் உதவி செய்யுங்கள். தவசி அண்ணன் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்"

இவ்வாறு ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

15 mins ago

சினிமா

49 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்