ஷாரூக்கான் - தீபிகா படுகோன் நடிக்கும் ‘பதான்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'ஜீரோ' படத்தின் தோல்விக்குப் பிறகு இன்னும் ஷாரூக்கான் நடிக்கவுள்ள எந்தவொரு படம் குறித்தம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. முதலில் அட்லீ படத்தைத் தொடங்கத் திட்டமிட்டார் ஷாரூக்கான்.
ஆனால், யாஷ்ராஜ் நிறுவனம் தங்களுடைய 50-வது ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு படங்களைத் திட்டமிட்டு வருகிறது. அதில் சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் ஷாரூக்கான் - ஜான் ஆபிரஹாம் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தைக் குறைந்த நாட்களில் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்துக்கு ‘பதான்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகவும், இதில் தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டன.
இந்நிலையில் நடிகை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் ‘நல்ல ஆரம்பம்’ என்று பதிவிட்டிருந்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் ‘பதான்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதைத்தான் தீபிகா இவ்வாறு குறிப்பால் உணர்த்தியுள்ளார் என்று பகிர்ந்து வருகின்றனர். பலர் அவரது சமூக வலைதளப் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.
ஆனால், படக்குழுவினர் இதுகுறித்து எந்தத் தகவலையோ, புகைப்படங்களையோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
32 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago