சிறு சலசலப்புடன் முடிவுற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்குப்பதிவு முடிவுற்றது. நாளை காலை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

2020-22ம் ஆண்டிற்கான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் இன்று (நவம்பர் 22) நடைபெற்றது. சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் கடும் போலீஸ் பாதுகாப்பு இடையே காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மொத்தம் 1,303 வாக்குகள் உள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 1,050 வாக்குகள் பதிவாகியுள்ளது. காலையிலிருந்து தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்று தங்களுடைய வாக்குகளைச் செலுத்தினார்கள்.

திடீரென்று, டி.ஆர் அணியினர் வாக்குகிற்கு பணம் கொடுக்கிறார்கள் என்று சலசலப்பு ஏற்பட்டது. வாக்காளர்களுக்கு கையில் தங்க நாணயமும், 2000 ரூபாய் நோட்டுகளாக பணமும் வழங்கப்படுவதாக கையில் பணத்துடன் பேட்டியளித்தனர். இதனால் சிறு சலசலப்பு ஏற்பட்டு அடங்கியது.

மாலை 4 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவுற்றது. இந்தத் தேர்தலில் ரஜினிகாந்த், தனுஷ், பாரதிராஜா உள்ளிட்ட சில முன்னணி தயாரிப்பாளர்கள் வாக்களிக்கவில்லை. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை (நவம்பர் 23) காலை தொடங்கி, உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE