எஸ்பிபி பெயரில் டப்பிங் ஸ்டுடியோ தொடக்கம்

By செய்திப்பிரிவு

எஸ்பிபி பெயரில் டப்பிங் ஸ்டுடியோ ஒன்றை டப்பிங் யூனியன் தொடங்கியுள்ளது.

இந்தியத் திரையுலகின் நட்சத்திரப் பாடகரான எஸ்பிபி செப்டம்பர் 25-ம் தேதி காலமானார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி டப்பிங் கலைஞராகவும் எஸ்பிபி பணிபுரிந்துள்ளார். இந்நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற்ற டப்பிங் யூனியனின் செயற்குழுவில் எஸ்பிபி பெயரில் டப்பிங் ஸ்டுடியோ தொடங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது எஸ்பிபியைக் கவுரவிக்கும் விதமாக இருக்கும் என டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி குறிப்பிட்டார்.

இந்நிலையில், இன்று (நவம்பர் 20) எஸ்பிபி பெயரிலான டப்பிங் ஸ்டுடியோவை ராதாரவி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, எஸ்பிபிக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஸ்டுடியோவைத் தலைவர் ராதாரவி திறந்து வைத்திருப்பது தங்களுக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று டப்பிங் யூனியன் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE