தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தும் விதமாக ஒரு பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார்.
பாடலாசிரியர் ப்ரசூன் ஜோஷியுடன் இணைந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கி வரும் பாடல் ‘பானி ஆன்தெம்’ (தண்ணீர் கீதம்). தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல் நேற்று இணையத்தில் வெளியானது.
இப்பாடல் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளதாவது:
''நாம் கவனிக்க வேண்டிய மிக மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று தண்ணீர் பற்றாக்குறை. தண்ணீரைச் சேமித்து, பாதுகாக்கவில்லை என்றால் நாம் பலவற்றை இழக்க வேண்டியிருக்கும் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு வலியுறுத்தும் விதமாக இப்பாடலை நானும் ப்ரசூன் ஜோஷியும் இணைந்து உருவாக்கியுள்ளோம்.
» 'மூக்குத்தி அம்மன் 2' கண்டிப்பாக உருவாகும்: ஆர்.ஜே.பாலாஜி
» ஸ்ரீதேவியின் இடத்தை யாராலும் பிடிக்க இயலாது: ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா
தண்ணீர் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான ஒரு அடித்தளத்தை அமைப்பது மிக அவசியம். தண்ணீர் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது? போன்றவற்றையெல்லாம் மக்களுக்கு கவனமுடன் நினைவூட்ட வேண்டும். இப்பாடலைப் பாடியிருக்கும் அனைத்துக் குழந்தைகளின் குரல்களும் மாற்றத்தை எதிர்பார்க்கும் நமது இளைஞர்களின் குரல்''.
இவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.`
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago