டிசம்பரில் தொடங்கும் தனுஷ் - கார்த்திக் நரேன் படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளது.

'அத்ரங்கி ரே', 'கர்ணன்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இந்தப் படங்களை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருந்தது.

தற்போது, 'அத்ரங்கி ரே' இந்திப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதை முடித்துவிட்டு 'கர்ணன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இவ்விரண்டு படங்களையும் இந்த மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளார் தனுஷ்.

டிசம்பரில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதில் நாயகியாக மாளவிகா மோகனன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பையும் தனது முந்தைய படங்கள் போலவே, குறைவான நாட்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளார் கார்த்திக் நரேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்