நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்குத் தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார் சமந்தா.
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா இன்று (நவம்பர் 18) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.
நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'நெற்றிக்கண்' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த டீஸர் தற்போது வரை 1 மில்லியன் பார்வைகளைக் கடந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், நயன்தாராவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக சமந்தா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நயன்தாராவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டே இருங்கள். நம்முடையது எதுவோ அதற்காகப் போராட வேண்டும் என்பதற்கான ஊக்கமாய் இருங்கள். நீங்கள் இன்னும் சிறக்க வேண்டும். உங்கள் வலிமைக்கும், அமைதியான உறுதி நிலைக்கும் என் வணக்கங்கள்".
இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago