நடிகர் தவசியிடம் விஜய் சேதுபதி பேசிய வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகப் பரவி வருகிறது.
'கிழக்கு சீமையிலேயே' படம் தொடங்கி 'அண்ணாத்த' வரை நடித்திருப்பவர் தவசி. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் பிரபலம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
புற்றுநோயினால் இவரது உடல் மிகவும் உருகி, ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிவிட்டார். தற்போதைய இவருடைய நிலை குறித்த பேட்டி, புகைப்படங்கள் அனைத்துமே இணையத்தில் வெளியாகின. விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களும் இவருக்கு உதவிகள் செய்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் செளந்தர்ராஜாவை நேரில் அனுப்பி விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் உதவி செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து தவசியிடம் தொலைபேசியிலும் பேசியுள்ளார் விஜய் சேதுபதி. அந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகியுள்ளது.
தவசி - விஜய் சேதுபதி உரையாடல் பின்வருமாறு:
தவசி: மாப்ள வணக்கம்.
விஜய் சேதுபதி: வணக்கம் மாமா.. எப்போதும் மாதிரி சாமி கும்பிட்டுத் தைரியமா இரு. அப்போ தான் இந்த நோய் உன்னை விட்டுப் போகும். ஒன்றும் பயப்படாதே.
தவசி: சரி மாப்ள.
விஜய் சேதுபதி: பயப்படாதே மாமா.
தவசி: சரி மாப்ள.
விஜய் சேதுபதி: உடம்பும் நீ பழைய மாதிரி ஆயிடுவே.
தவசி: சரி மாப்ள.
விஜய் சேதுபதி: பயப்பட மட்டும் செய்யாதே. நீ ஆரோக்கியமாக இருக்கிற என்பதை மட்டும் நம்பு. அது உன்னைக் காப்பாற்றிவிடும்.
தவசி: சரி மாப்ள..
விஜய் சேதுபதி: உனக்காக நாங்களும் சேர்ந்து வேண்டிக்கிறோம்.
தவசி: சரி மாப்ள.. நல்லா வேண்டிக்கோ..
விஜய் சேதுபதி: நான் பண்ணின புண்ணியம் எல்லாம், தானா வந்து உட்காந்திரும். இன்னா
தவசி: சரி மாப்ள..
விஜய் சேதுபதி: சரி மாமா.. ஒண்ணும் பயப்படாதே மாமா..
தவசி: சரி மாப்ள..
விஜய் சேதுபதி: ஒன்றும் ஆகாது மாமா. கவலைப்படாதே..
தவசி: சரி மாப்ள..
விஜய் சேதுபதி: உடம்பைப் பார்த்துக்கோ.
தவசி: சரி மாப்ள.. ரொம்ப நன்றி மாப்ள. என்றைக்கும் மறக்க மாட்டேன் மாப்ள.
விஜய் சேதுபதி: உடம்ப பாத்துக்கோ மாமா..
முக்கிய செய்திகள்
சினிமா
42 mins ago
சினிமா
57 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago