'சாணிக் காயிதம்' ஃபர்ஸ்ட் லுக்கிற்கு வரவேற்பு

By செய்திப்பிரிவு

'சாணிக் காயிதம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராக்கி'. இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்று வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில், 'ராக்கி' படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பால் அருண் மாதேஸ்வரனுக்கு அடுத்த படத்துக்கான வாய்ப்பு கிடைத்தது. நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் இயக்குநர் செல்வராகவன். அவர் நடிகராக அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

'சாணிக் காயிதம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று (நவம்பர் 15) வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவருமே வித்தியாசமான லுக்கில் இருப்பதைப் பலரும் வரவேற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE