சுசீந்திரன் - ஜெய் இணையும் ஷிவ ஷிவா

By செய்திப்பிரிவு

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படத்துக்கு 'ஷிவ ஷிவா' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று (நவம்பர் 14) இந்தப் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

'ஈஸ்வரன்' படத்துக்கு முன்னதாக, ஜெய் நாயகனாக நடித்த 2 படங்களை இயக்கி முடித்துள்ளார் சுசீந்திரன். இதில் ஒரு படத்தை ஐஸ்வர்யா தயாரித்துள்ளார். முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளார் ஜெய்.

தற்போது, இந்தப் படத்துக்கு 'ஷிவ ஷிவா' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் மீனாட்சி நாயகியாக நடித்துள்ளார். சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள்தாஸ், இயக்குநர் முக்தார் கான் உள்ளிட்ட பலர் ஜெய்யுடன் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜெய், எடிட்டராக காசி விஸ்வநாதன், கலை இயக்குநராக சேகர், நடன இயக்குநராக ஷோபி பால்ராஜ் ஆகியோர் இதில் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்