'சூரரைப் போற்று' படத்தைப் பார்த்துவிட்டு, படக்குழுவினருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் பாரதிராஜா.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் இல்லாமல், அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ளது. திரையுலகினர் பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.
'சூரரைப் போற்று' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில் காற்றாய், கவிதையாய் கனலாய்... காட்சிக்குக் காட்சி என் கண்களைத் தெறிக்கவிட்ட சுதா மற்றும் மார்க்கண்டேயரின் தவப்புதல்வன் சூர்யாவே உங்கள் வியர்வை மழை உங்களைச் சிகரத்தில் சிறகடிக்க வைத்துவிட்டது. வாழ்த்துகள் சூர்யா. அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்."
இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago