‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்’ படத்துக்காக வார்னர்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் ஜானி டெப்புக்குத் தருவதாக ஒப்புக்கொண்ட 10 மில்லியன் டாலர்களையும் முழுமையாக வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹாரி பாட்டர் திரைப்படங்களின் தொடர்ச்சியாக வெளியான திரைப்படம் ‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்’. இரண்டு பாகங்களாக வெளியான இத்திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படங்கள் ஹாரி பாட்டர் அளவுக்கு நல்ல வரவேற்பைப் பெறவில்லை எனினும் ஜானி டெப் கதாபாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்’ படத்தின் மூன்றாம் பாகத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு மதிப்பு கொடுத்து தான் விலகிக்கொள்ளச் சம்மதித்ததாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜானி டெப் கூறியிருந்தார்.
இது அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. பலரும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.
» தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
» 'ஆரண்ய காண்டம்' பார்த்து கமல் சொன்னது என்ன? - எஸ்பிபி சரண் பகிர்வு
இந்நிலையில் வார்னர்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் ஜானி டெப்புக்குத் தருவதாக ஒப்புக்கொண்ட 10 மில்லியன் டாலர்களையும் முழுமையாக வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் ‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்’ படத்தின் மூன்றாம் பாகத்தில் இதுவரை ஒரே ஒரு காட்சியில் மட்டுமே டெப் நடித்திருந்தாலும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முழு சம்பளத்தையும் வழங்க இருப்பதாகத் தெரிகிறது.
ஜானி டெப் தனது மனைவியை அடித்துத் துன்புறுத்துவதாக லண்டனில் வெளியாகும் பிரபல பத்திரிகை ஒன்று கட்டுரை வெளியிட்டது. இதற்கு எதிராக ஜானி டெப் தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு அவருக்கு எதிராகவே வந்ததால், வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அவரைத் தங்கள் படத்திலிருந்து விலகுமாறு கூறியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
29 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago