'பலூன்' திரைப்படத்தின் இயக்குநர் சினிஷ் 'பூச்சாண்டி' என்கிற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தில் அஞ்சலி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
'வேட்டை மன்னன்' திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் சினிஷ். 'பலூன்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஆகியோர் நடித்திருந்தனர். 2017ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.
தற்போது இந்தப் படத்தின் இயக்குநர் சினிஷ் 'பூச்சாண்டி' என்கிற திரைப்படத்தை, சோல்ஜர்ஸ் ஃபேக்டரி என்கிற நிறுவனத்தின் பெயரில் தயாரித்துள்ளார். அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் சினிஷ் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அதிகம் வெற்றி கண்ட நகைச்சுவை திகில் வகைத் திரைப்படமாக இது உருவாகிறது. இந்த போஸ்டரில் அஞ்சலி பேயாகவும், அவருக்குப் பின்னால் கையில் ரோஜாவோடு யோகி பாபு பேய் ஓட்டுபவரைப் போலவும் நிற்கிறார். இவர்களுக்கு மேல் பேய்கள் முன்னேற்றக் கழகம் என்கிற பலகை இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ரேஷ்மா, 'விஜய் டிவி' ராமர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
கிட்டத்தட்ட பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. குழந்தைகளுக்குப் பிடித்தமான பேய்ப் படமாக இது இருக்கும் என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago