யாரையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள்: விவேக் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

யாரையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள் என்று விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆடை வடிவமைப்பாளர் சத்யா பல்வேறு திரையுலக பிரபலங்களை வித்தியாசமான ஆடைகள் கொடுத்து போட்டோ ஷூட் செய்து வருகிறார். நாசர், மன்சூர் அலிகான், கருணாஸ், 'நீயா நானா' கோபிநாத் உள்ளிட்ட பலருமே இந்த போட்டோ ஷூட்டில் இடம்பெற்றிருந்தார்கள்.

இந்தப் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் பெரும் வைரலானது. சமீபமாக விவேக் வைத்து எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியானது. அதுவும் சமூக வலைதளத்தில் பெருமளவில் பாராட்டைப் பெற்றது.

விவேக்கின் போட்டோ ஷூட் புகைப்படங்களை வைத்துக் கொண்டு, பல்வேறு நடிகர்களுடன் அவரை ஒப்பிட்டு கருத்துகளை பகிர்ந்து வந்தார்கள். மேலும் இதர நடிகர்களுக்கு போட்டியாக விவேக் என்று சில செய்திகளும் வெளியாகியுள்ளது. தற்போது அவ்வாறு ஒப்பிடல் வேண்டாம் என்று விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக விவேக் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"அன்பு ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள்.எனது சமீபத்திய போட்டோ ஷுட் படங்கள் பார்த்து விட்டு, “ஹீரோக்களுக்கு(பெயர் குறிப்பிட்டு) போட்டியாக விவேக்” என்று செய்தி வருகிறது.நான் யாருக்கும் போட்டி அல்ல.யாரையும் யாருடனும் ஒப்பிடல் வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்