தனது அடுத்த படங்கள் என்ன என்பது குறித்து சூர்யா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 12-ம் தேதி சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் வெளியாகவுள்ளது. திரையரங்கில் அல்லாமல் அமேசான் ப்ரைம் ஓடிடியில் தீபாவளி வெளியீடாக வரவுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு சூர்யாவின் படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம், 'வாடிவாசல்' ஆகிய படங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், எது முதலில் தொடங்கும் என்ற குழப்பம் நிலவி வந்தது. தற்போது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூர்யா அளித்துள்ள பேட்டியில் தனது அடுத்த பட வரிசையை உறுதி செய்துள்ளார்.
முதலில் 'நவரசா' ஆந்தாலஜி, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம், 'வாடிவாசல்' ஆகிய வரிசையில் நடிக்கவுள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார். இதில் த.செ.ஞானவேல் படத்தை சூர்யா குறிப்பிடவில்லை. ஏனென்றால், அதில் சிறு கதாபாத்திரத்தில் தான் சூர்யா நடிக்கவுள்ளது நினைவு கூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago