நவ.7 ஆம் தேதி கமல் - லோகேஷ் கனகராஜ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்?

நவம்பர் 7 ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாகத் தெரிகிறது.

'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், நவம்பர் 7 ஆம் தேதி கமல் தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். அன்றைய தினத்தில் கமல் - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனத் தெரிகிறது. ஏனென்றால் சமீபத்தில் இந்தப் படத்துக்கான போட்டோ ஷூட் நடைபெற்றது.

நவம்பர் 7 ஆம் தேதி கமல் ரசிகர்களை உற்சாகமாக்கும் வகையில் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. சென்னையிலேயே ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்து, 'இந்தியன் 2' படத்துக்கு முன்பாக வெளியிட முடிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE