நவம்பர் 22-ம் தேதி நடைபெறவுள்ள தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு நவம்பர் 22-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நவம்பர் 22 அன்று காலை 8 மணி முதல் 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த முறை முன்னணித் தயாரிப்பாளர்கள் பலரும், தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. ஏனென்றால் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பிரிந்து பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முன்னணித் தயாரிப்பாளர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். இந்தச் சங்கத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட உள்ளவர்களின் பட்டியலை தேர்தல் அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அதன்படி தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, தேனப்பன் பி.எல். ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் பி.எல்.தேனப்பன் மட்டும் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார்.
துணைத் தலைவர் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
செயலாளர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ்.எஸ், கே.ராஜன், ஜே.சதீஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் ஜே.சதீஷ்குமார் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார்.
மேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அனிதா உதீப், அழகன் தமிழ்மணி, பாபு கணேஷ், பெஞ்சமின், சந்திரசேகர், டேவிட் ராஜ், ஏழுமலை, ஆர்.மாதேஷ், மனோபாலா, ப்ரவீன் காந்த், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 94 பேர் போட்டியிடவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago