பெற்றோருக்குக் கரோனா தொற்று: ஐபிஎல் வர்ணனைப் பணியிலிருந்து பாவனா விலகல்

By செய்திப்பிரிவு

பெற்றோருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஐபிஎல் போட்டிகளுக்கான வர்ணனைப் பணியிலிருந்து பாவனா விலகியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன. இதனால் வீரர்கள், வர்ணனையாளர்கள் உள்ளிட்ட அனைவருமே கோவிட் பரிசோதனைக்குப் பிறகு பங்கேற்றனர். இன்று (அக்டோபர் 30) 50-வது போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் வர்ணனையாளராகப் பணிபுரிந்து வருகிறார் பாவனா. விஜய் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளராக இருந்தவர், ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கென்று தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமீபத்தில் கூட பாடல்கள் உருவாக்கி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுப் பாராட்டுகளை அள்ளினார்.

தற்போது தன் பெற்றோருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஐபிஎல் போட்டிகள் வர்ணனைப் பணியிலிருந்து பாவனா விலகியுள்ளார்.

இது தொடர்பாக பாவனா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"தனிப்பட்ட காரணங்களுக்காக கனத்த இதயத்துடன், ஐபில் தொடரிலிருந்து விலகுகிறேன். என்னுடைய பெற்றோருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் ஒரே மகளாக, நான் சென்னையில் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்த சீசன் முழுவதும் நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்".

இவ்வாறு பாவனா தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவைத் தொடர்ந்து பாவனாவுக்குப் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE