'சூரரைப் போற்று' படத்தில் மோகன் பாபு நடித்ததற்காக அவரது மகள் லட்சுமி மஞ்சுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சூர்யா.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. தீபாவளி வெளியீடாக நவம்பர் 12-ம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
'சூரரைப் போற்று' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் தெலுங்கிலும் 'Aakaasam Nee HaddhuRa' என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இதன் ட்ரெய்லரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
சூர்யாவின் ட்ரெய்லர் ட்வீட்டைக் குறிப்பிட்டு லட்சுமி மஞ்சு, "இதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். தீபாவளி இன்னும் ஒளியுடன் இருக்கப் போகிறது" என்று தெரிவித்தார்.
லட்சுமி மஞ்சுவின் ட்வீட்டைக் குறிப்பிட்டு சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"உங்களுக்குப் படத்தைக் காட்டக் காத்திருக்கிறேன். எல்லாப் பெருமைகளும் உங்களுக்குத்தான் லட்சுமி மஞ்சு. மோகன் பாபுவைச் சம்மதிக்க வைத்ததற்கு நன்றி. (அவர் நடிக்க வந்தது) என்ன ஒரு ஆசீர்வாதம்!"
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
சினிமா
26 mins ago
சினிமா
34 mins ago
சினிமா
55 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago