முன்னணி ஹாலிவுட் நடிகைகளில் ஒருவரான ஸ்கார்லெட் ஜொஹான்ஸன், நகைச்சுவையாளர் காலின் ஜோஸ்டை மணந்துள்ளார். இச்செய்தியை மீல்ஸ் ஆன் வீல்ஸ் என்கிற அறக்கட்டளை இன்ஸ்டாகிராமில் உறுதி செய்துள்ளது.
மார்வல் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றவர் ஸ்கார்லெட் ஜொஹான்ஸன். 'தி ப்ரெஸ்டீஜ்', 'லூசி', 'ஜோஜோ ரேபிட்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார். சக நடிகர் ரயன் ரேனால்ட்ஸை 2008 ஆம் ஆண்டு மணந்து 2011 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின் ரொமைன் டௌரியாக் என்கிற ஃபிரெஞ்ச் விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரை 2014 ஆம் ஆண்டு மணந்து, 2017-ல் விவாகரத்து செய்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நகைச்சுவையாளர் காலின் ஜோஸ்டைக் காதலித்து வந்தார். இவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு மே மாதம் திருமண நிச்சயம் நடந்தது. கடந்த ஜூலை மாதம் திருமணம் குறித்துப் பேசியிருந்தார் ஜோஸ்ட். கரோனா பிரச்சினை காரணமாக தங்களின் திருமணத் திட்டங்களை மாற்றியமைத்துள்ளதாகக் கூறியிருந்தார். வயதானவர்களை, உறவினர்களைப் பெரிய குழுவாகத் திரட்டி ஆபத்து ஏற்படுத்தக்கூடாது என்றும் பேசியிருந்தார்.
தற்போது நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டும் பங்கேற்க, இவர்கள் திருமணம் நடைபெற்றது. கோவிட் சமயத்தில் ஆதரவற்றவர்களுக்கு உதவி வரும் மீல்ஸ் ஆன் வீல்ஸ் என்கிற அறக்கட்டளை, இந்தத் திருமணச் செய்தியை இன்ஸ்டாகிராமில் உறுதி செய்தது.
» ‘மிகவும் ஆழமான திரைப்படம்’ - 'ப்ளாக் விடோ' பற்றி மனம் திறக்கும் ஸ்கார்லெட்
» 'பிளாக் விடோ'வாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? - ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் பகிர்வு
"ஸ்கார்லெட் ஜொஹான்ஸனும், காலின் ஜோஸ்டும் கடந்த வார இறுதியில் நெருங்கிய சொந்தங்களும் நண்பர்களும் மட்டும் கலந்து கொண்ட ஒரு சிறிய விழாவில் திருமணம் செய்து கொண்டனர் என்கிற செய்தியை முதலில் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறோம். கோவிட்-19 காலத்தில் அத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளும் இதில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆதரவற்ற, வயதானவர்களுக்கு இந்தக் கடினமான சூழலில் உதவி செய்ய வேண்டும் என்பதே இவர்களின் திருமண நாள் விருப்பம். இதற்காக எங்கள் அமைப்புக்கு ஆதரவு தாருங்கள். இந்த மகிழ்ச்சியான தம்பதியைக் நன்கொடை அளித்துக் கொண்டாடுங்கள்" என்று அந்த அமைப்பு பதிவிட்டுள்ளது. ஜொஹான்ஸனின் செய்தித் தொடர்பாளரும் திருமணச் செய்தியை உறுதி செய்துள்ளார்.
ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பிளாக் விடோ' திரைப்படத்தின் வெளியீடு, கோவிட் நெருக்கடி காரணமாக அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago