ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், இந்தியில் உருவாகும் 'அத்ரங்கி ரே' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு காரைக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு 'கர்ணன்', கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ்.
இன்று (அக்டோபர் 29) 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்' ஆகிய படங்களின் இயக்குநர் ராம்குமாருக்குப் பிறந்த நாள். இதனை முன்னிட்டு அவர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
தனுஷ் - ராம்குமார் கூட்டணி படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ராம்குமாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக அந்நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
» திரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்: ஜி.கே.சினிமாஸ் ரூபன் உருக்கமான வேண்டுகோள்
» வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்: பி.சி.ஸ்ரீராம் நெகிழ்ச்சி
"திறமையான 'ராட்சசன்' இயக்குநர் ராம்குமாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். உங்களுடைய அடுத்த தனுஷ் படத்தில், உங்களோடு இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம்".
இவ்வாறு சத்யஜோதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ட்வீட்டின் மூலம் தனுஷ் - ராம்குமார் கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தவிர்த்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள படம், செல்வராகவன் படம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago