பிறந்த நாளை முன்னிட்டு லாரன்ஸ் நடிக்கவுள்ள புதிய படத்தை அறிவித்துள்ளது படக்குழு.
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'லட்சுமி' படத்தை இயக்கியுள்ளார் லாரன்ஸ். தமிழில் தனது இயக்கத்தில் பெரும் வரவேற்பு பெற்ற 'காஞ்சனா' படத்தை இந்தியில் இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்தப் படம் நவம்பர் 12-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
தமிழில் பி.வாசு இயக்கத்தில் உருவாகும் 'சந்திரமுகி 2' படத்திலும், 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் லாரன்ஸ். இன்று (அக்டோபர் 29) லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு, 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
'ருத்ரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இயக்குநர் யார் என்பதை படக்குழு அறிவிக்கவில்லை. இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார். புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
» திரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்: ஜி.கே.சினிமாஸ் ரூபன் உருக்கமான வேண்டுகோள்
» வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்: பி.சி.ஸ்ரீராம் நெகிழ்ச்சி
'லட்சுமி' படத்தின் பணிகள் அனைத்துமே முடிவடைந்துவிட்டதால், தற்போது தமிழில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் லாரன்ஸ்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago