கவுன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் வென்ற பரிசுப் பணத்தை வைத்து தன் மனைவிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்போகிறேன் என்று சொன்ன போட்டியாளரை நடிகர் அமிதாப் பச்சன் கண்டித்துள்ளார்.
கடந்த 20 வருடங்களாக நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி கவுன் பனேகா க்ரோர்பதி (கேபிசி). இதில் சமீபத்தில் கோஷ்லேந்திர சிங் டோமர் என்கிற போட்டியாளர் கலந்துகொண்டார். இவர் மத்தியப் பிரதேச கிராமம் ஒன்றின் கிராமப் பஞ்சாயத்து அதிகாரியாக இருப்பவர்.
இந்தப் போட்டியில் ரூ.40,000 வென்ற டோமரிடம், 'அந்தப் பரிசுப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார். இதற்குப் பதிலளித்த டோமர், 15 வருடங்களாக தனது மனைவியின் அதே முகத்தைப் பார்த்து அலுத்துவிட்டதாகவும், எனவே மனைவியின் முகத்தை மாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்போவாகவும் கூறினார்.
இதைக் கேட்டு அமிதாப் அதிர்ச்சியடைந்தார். ஆனால், தான் விளையாட்டாகவே இதைச் சொன்னதாக டோமர் கூறினார். இதற்கு அமிதாப், இதுபோன்ற விஷயங்களை விளையாட்டாகக் கூடச் சொல்லக்கூடாது என்று கண்டிப்புடன் கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago