ஒரே சமயத்தில் 5 மொழிகளில் வெளியாகும் ஈஸ்வரன்

By செய்திப்பிரிவு

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'ஈஸ்வரன்' படத்தை 5 மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

'மாநாடு' படத்துக்கு முன்பாக குறுகியகாலத் தயாரிப்பாக உருவாகும் 'ஈஸ்வரன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. சுசீந்திரன் இயக்கி வரும் இந்தப் படத்தினை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.

'ஈஸ்வரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (அக்டோபர் 26) காலை சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. உடல் எடையைக் குறைத்தும், உடலமைப்பை மாற்றியும் சிம்பு நடித்து வரும் படம் என்பதால், இதன் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது, ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 'ஈஸ்வரன்' வெளியாகும் என சிம்பு தனது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார். அந்தெந்த மொழிக்கான போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளார்.

ஈஸ்வரன் படத்தில் பாரதிராஜா, மனோஜ், நிதி அகர்வால், நந்திதா, பால சரவணன், முனீஸ்காந்த், யோகி உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக ராஜீவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE