'கே.ஜி.எஃப் 2' அப்டேட்: ரவீனா டண்டன் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

'கே.ஜி.எஃப் 2' படத்தில் ரவீனா டண்டன் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் 'கே.ஜி.எஃப்'. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் முதல் பாகத்துடன் முடிவடையவில்லை. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக 'கே.ஜி.எஃப் 2' தயாரிப்பில் உள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கி வரும் இந்தப் படத்தில் முதல் பாகத்தின் நடிகர்களுடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்று (அக்டோபர் 26) ரவீனா டண்டன் பிறந்த நாளாகும்.

அதனை முன்னிட்டு, ரவீனா டண்டன் லுக்கை வெளியிட்டுள்ளது 'கே.ஜி.எஃப் 2' படக்குழு. இதில் ரமீகா சென் என்ற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் ரவீனா டண்டன் நடித்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் முடிந்து படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 'கே.ஜி.எஃப் 2' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் 'கே.ஜி.எஃப் 2' வெளியாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE