மீண்டும் தொடங்கப்படும் 'முஃப்தி' தமிழ் ரீமேக்: இயக்குநர் மாற்றம்

சிம்பு நடிப்பில் உருவாகி வந்த 'முஃப்தி' தமிழ் ரீமேக் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்குப் பிறகு, 'முஃப்தி' தமிழ் ரீமேக்கில் கவனம் செலுத்தத் தொடங்கினார் சிம்பு. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு கர்நாடகாவில் தொடங்கப்பட்டது. சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்க ஞானவேல்ராஜா தயாரித்து வந்தார்.

கன்னடத்தில் 'முஃப்தி' படத்தை இயக்கிய நரதனே, தமிழ் ரீமேக்கையும் இயக்கி வந்தார். சிம்பு சரியாக படப்பிடிப்பு வருவதில்லை போன்ற சில சிக்கல்களால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதன் படப்பிடிப்பு தாமதத்தால் இயக்குநர் நரதன் விலகிவிட்டார். தற்போது யாஷ் நடிக்கவுள்ள படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார். 'முஃப்தி' தமிழ் ரீமேக்கில் ஞானவேல்ராஜா - சிம்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு அனைத்துமே தற்போது நீங்கியுள்ளது.

இந்நிலையில், மீண்டும் 'முஃப்தி' தமிழ் ரீமேக்கைத் தொடங்கவுள்ளனர். இயக்குநர் நரதனுக்குப் பதிலாக 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கவுள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம், 'மாநாடு' ஆகிய படங்களை முடித்துவிட்டு, 'முஃப்தி' தமிழ் ரீமேக்கில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளார் சிம்பு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE