விக்ரம் பிரபு நடிக்கும் பாயும் ஒளி நீ எனக்கு

By செய்திப்பிரிவு

விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கவுள்ள படத்துக்கு 'பாயும் ஒளி நீ எனக்கு' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

முத்தையா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம் பிரபு. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் லட்சுமி மேனன் நாயகியாக நடித்து வருகிறார். முழுக்க மதுரையைச் சுற்றி படமாக்கப்பட்டு வரும் இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விக்ரம் பிரபு. மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. 'பாயும் ஒளி நீ எனக்கு' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை கார்த்திக் செளத்ரி இயக்கவுள்ளார்.

விக்ரம் பிரபுவுக்கு நாயகியாக வாணி போஜன், வில்லனாக தனஞ்ஜெயா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ஒளிப்பதிவாளராக ஸ்ரீதர், இசையமைப்பாளராக மணிசர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர், எடிட்டராக வெங்கடேஸ்வர ராவ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி, 2021-ல் வெளியிட படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 mins ago

சினிமா

51 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்