நடிகர் கவுண்டமணி நலமுடன் இருப்பதாக அவரது தரப்பிலிருந்து உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான கவுண்டமணியின் உடல்நிலை குறித்து ஒரு தனியார் யூடியூப் சேனலில் செய்தி வந்தது. அவரது நிலை மோசமாக இருப்பதாக சொல்லப்பட்டதால் அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக, கவுண்டமணியின் தரப்பில் விசாரிக்க அவரது தரப்பில் தொடர்பு கொண்டபோது, "யூ டியூப்பில் நடிகர் கவுண்டமணி அவர்களைப் பற்றி வதந்தியை கிளப்பி உள்ளனர். அது உண்மையல்ல. அவர் நலமுடன் இருக்கிறார். புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இது போல் தவறான செய்தியை பரப்பும் அந்த நபர் மீது காவல் துறையில் புகார் அளிக்க வேண்டி வரும் என்று கவுண்டமணி கூறியுள்ளார். அவர்களே அந்த யூ டியூப்பில் உள்ள கவுண்டமணி பற்றிய தவறான தகவலை உடனடியாக நீக்கவில்லை என்றால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்” என்று தெரிவிக்கப்பட்டது.
கவுண்டமணியின் தரப்பிலிருந்தே அவர் நலமுடன் இருப்பதாக உறுதியான தகவல் வந்துள்ளதால் ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர். கடைசியாக கவுண்டமணி 2016ஆம் ஆண்டு வாய்மை என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago