விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் 'நெற்றிக்கண்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தன் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் 'நெற்றிக்கண்'. 'அவள்' படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 80% முடிந்த நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று ‘நெற்றிக்கண்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
» ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ‘டிராமா’
» ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஜூனியர் என்டிஆர் கதாபாத்திரத்தின் டீஸர் வெளியீடு
2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து பெரும் வெற்றிபெற்ற படம் ‘நானும் ரவுடிதான்’. இப்படம் வெளியாகி நேற்றோடு 5 ஆண்டுகள் ஆகின்றன. அப்படத்தின் நினைவாக விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ரவுடி பிக்சர்ஸ் என்று பெயரிட்டுள்ளார்.
2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படமான 'ப்ளைண்ட்' படத்தின் ரீமேக் 'நெற்றிக்கண்' என்று தகவல் வெளியானது. இது தொடர்பாகப் படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
40 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago