புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் தான் வென்று விட்டதாக நடிகர் சஞ்சய் தத் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 61 வயதான சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வந்தன. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை என்றாலும் பாலிவுட் பத்திரிகையாளர் கோமல் நாட்டா இச்செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து, சஞ்சய் தத் வேகமாகக் குணம் பெற பிரார்த்தனை செய்வோம் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் மருத்துவச் சிகிச்சைக்காக தற்காலிக ஓய்வு எடுத்துக்கொள்வதாக சில நாட்களுக்குப் பின் அறிவிக்கப்பட்டது.
பிறகு சஞ்சய் தத் மெலிந்து காணப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் பரவியது. இது அவரது ரசிகர்கள் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின், 'கே.ஜி.எஃப் 2' படக் கதாபாத்திரத்துக்கான சிகை அலங்காரம் செய்ய நட்சத்திர சலூனுக்கு சஞ்சய் தத் சென்றார். இந்த வீடியோவை, சலூன் உரிமையாளர் ஆலிம் ஹகீம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் தற்போது, தான் புற்றுநோயிலிருந்து மீண்டுவிட்டதாக சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"கடந்த சில வாரங்கள் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மிகக் கடினமானதாக இருந்தது. ஆனால், கடினமான போர்களை வலிமையான போர் வீரர்களுக்குத்தான் கடவுள் கொடுப்பார் என்று சொல்வதைப் போல ஏற்றுக்கொண்டோம். என் குழந்தையின் பிறந்த நாளான இன்று இந்தப் போராட்டத்திலிருந்து நான் வெற்றிகரமாக வந்திருப்பதில், எங்கள் குடும்பத்தின் நலன் மற்றும் ஆரோக்கியம் என்கிற சிறந்த பரிசைக் கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி.
உங்களது அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் ஆதரவு இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. என்னுடன் நின்ற, இந்தக் கடினமான கட்டத்தில் எனக்குத் தெம்பாக இருந்த எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் அத்தனை ரசிகர்களுக்கும் நான் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன். அனைத்து அன்பு, கனிவு, கணக்கில் அடங்காத ஆசிர்வாதங்களுக்கு நன்றி.
கோகிலாபென் மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர் செவாந்தி, அவரது மருத்துவர் குழு, செவிலியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு குறிப்பாக என் நன்றி. கடந்த சில வாரங்களாக என்னை அவ்வளவு நன்றாகப் பார்த்துக் கொண்டனர்" என்று சஞ்சய் தத் பதிவிட்டுள்ளார்.
கடைசியாக சஞ்சய் தத் நடிப்பில் 'சடக் 2' திரைப்படம் ஓடிடியில் வெளியானது. 'கே.ஜி.எஃப் 2' படத்தில் ஆதிரா என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்து வருகிறார். மேலும், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பான 'ஷம்ஷேரா' படத்திலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் 'பூஜ் தி ப்ரைட் ஆஃப் இண்டியா' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
47 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago