இன்னும் இரு திரைப்படங்களுடன் நிறைவுக்கு வரும் ’ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’

By பிடிஐ

யுனிவர்ஸல் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கியத் திரைப்பட வரிசையான 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' நிறைவுக்கு வருகிறது. ஜஸ்டின் லின் இயக்கத்தில் அடுத்தடுத்து இரு திரைப்படங்களுடன் இந்த வரிசை நிறைவு பெறவிருக்கிறது.

2001 ஆம் ஆண்டு 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' முதல் படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை மொத்தம் 9 திரைப்படங்கள் இந்த வரிசையில் வெளியாகியுள்ளன. வின் டீஸல் இதன் நாயகனாக நடித்து வருகிறார்.

கடைசி இரண்டு படங்களிலும் வின் டீஸல் உள்ளிட்ட மற்ற முதன்மைக் கதாபாத்திரங்கள் அனைவரும் நடிக்கவுள்ளனர். ஜஸ்டின் லின் இதுவரை இந்த வரிசையில், 2006 ஆம் ஆண்டு வெளியான 'தி ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் டோக்கியோ ட்ரிஃப்ட்', 2011 ஆம் ஆண்டு வெளியான 'ஃபாஸ்ட் ஃபைவ்', 2013 ஆம் ஆண்டு வெளியான 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 6' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அடுத்து வரவிருக்கும் 'எஃப் 9' படத்தையும் இயக்கியுள்ளார்.

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' திரைப்படங்களின் ட்வைன் ஜான்ஸன் மற்றும் ஜேஸன் ஸ்டேதம் கதாபாத்திரங்களை வைத்து உருவாக்கபட்ட 'ஹாப்ஸ் அண்ட் ஷா' திரைப்படம் சர்வதேச அளவில் 5.89 பில்லியன் டாலர்களை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

'எஃப் 9' திரைப்படம் இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளது. 2020 ஆம் ஆண்டு வெளியாக வேண்டிய படம் கரோனா நெருக்கடியால் 2021 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் பிறகு இன்னும் இரண்டே படங்களுடன் இந்த வரிசை நிறைவுக்கு வருவதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

மேலும்