மீண்டும் சமூக வலைதளத்தில் இணைகிறார் சிம்பு

By செய்திப்பிரிவு

சமூக வலைதளங்களில் சிம்பு அக்டோபர் 22-ம் தேதி அன்று மீண்டும் இணைகிறார்.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தனது உடலமைப்பை முழுமையாக மாற்றிவிட்டார் சிம்பு. சுமார் 20 கிலோ வரை குறைத்துள்ளார்.

மேலும், அவர் எந்தவொரு சமூக ஊடகத்திலும் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு அனைத்து சமூக ஊடகங்களிடம் இருந்து சிம்பு விலகினார்.

தற்போது மீண்டும் சமூக வலைதளத்துக்கு வர முடிவு செய்துள்ளார் சிம்பு. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அக்டோபர் 22-ம் தேதி வெளிவரவுள்ளது. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் என அனைத்திலுமே மீண்டும் சிம்பு இணையவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

சுசீந்திரன் படத்தை முடித்துவிட்டு, நவம்பர் முதல் வாரத்திலிருந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் சிம்பு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்