சென்னை அணி இப்படி விளையாடிப் பார்த்ததே இல்லை. வலியைத் தருகிறது என்று இயக்குநர் வெங்கட் பிரபு வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு படுமோசமாக விளையாடி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை 10 போட்டிகளில் 7 தோல்வி, வெறும் 6 புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ளது.
நேற்று (அக்டோபர் 19) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் படுமோசமான விமர்சனங்களை சமூக வலைதளத்தில் எதிர்கொண்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:
"இந்த சீஸனில் ரெய்னா இல்லாத குறையை உணர்கிறேன். இவ்வளவு வருடங்களாக சென்னை அணி இப்படி விளையாடிப் பார்த்ததே இல்லை. வலியைத் தருகிறது. இவ்வளவு வருடங்களாக மற்ற அணிகளை சென்னை தோற்கடிக்கும்போது அந்த அணியின் ரசிகர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்பது இப்போது எனக்குத் தெரிகிறது".
இவ்வாறு வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago