ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பூமிகா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
'இது வேதாளம் சொல்லும் கதை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ரதீந்திரன் ஆர்.பிரசாத். அஸ்வின், அபய் தியோல், ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்தப் படத்தின் மூலம் கிடைத்த நட்பால், தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான நாயகியாக நடிக்கும் படத்தை ரதீந்திரன் இயக்கினார். அந்தப் படத்தின் பணிகள் அனைத்துமே முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இப்படத்துக்கு 'பூமிகா' எனத் தலைப்பிடப்பட்டு இருப்பதாக படக்குழு சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. தற்போது, 'பூமிகா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார்.
» 30% சம்பளக் குறைப்பு: நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள்
த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபலங்கள் பாராட்டி, ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.
முழுக்க மலைப் பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் 25-வது படமாக 'பூமிகா' உருவாகியுள்ளது. ஒளிப்பதிவாளராக ராபர்ட், இசையமைப்பாளராக ப்ரித்வி சந்திரசேகர், எடிட்டராக ஆனந்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
45 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago