முத்தையா இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ்

By செய்திப்பிரிவு

முத்தையா இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கவுள்ளார்.

'தேவராட்டம்' படத்தைத் தொடர்ந்து, விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் முத்தையா. இதில் லட்சுமி மேனன் நாயகியாக நடித்து வருகிறார். முழுக்க மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

'பேச்சி' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்தப் படம் திரையரங்க வெளியீடு அல்லாமல், நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பும், சன் நெக்ஸ்ட்டிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்துக்குப் பிறகு கார்த்தி நாயகனாக நடிக்கும் படத்தை முத்தையா இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே, ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கும் படமொன்றை இயக்கவுள்ளார். முத்தையா. இதனை ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்த 'மருது' படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் ஆர்.கே.சுரேஷ்.

வில்லனாக நடிக்கத் தொடங்கியவர், தற்போது நாயகனாக 'வேட்டை நாய்', 'விசித்திரன்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஆர்.கே.சுரேஷ். இந்தப் படங்களைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE