'பரோஸ்' அப்டேட்: ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

மோகன்லால் இயக்கவுள்ள 'பரோஸ்' படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருக்குமே நெருங்கிய நண்பராகவும் வலம் வருபவர் மோகன்லால்.

முதன்முறையாக படமொன்றை இயக்கவுள்ளார் மோகன்லால். இது தொடர்பான அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். 'மை டியர் குட்டிச்சாத்தான்' இயக்குநர் ஜிஜோ ஆங்கிலத்தில் எழுதியுள்ள வைத்துள்ள ‘பரோஸ் –கார்டியன் ஆஃப் டி-காமாஸ் ட்ரெஷர்’ என்னும் போர்த்துக்கீசியர்கள் குறித்த கதையைத் தான் மோகன்லால் இயக்கவுள்ளார்.

இந்தக் கதையில் ஸ்பெனீஷ் நடிகர்களுடன் இணைந்து, பரோஸ் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளார். முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் உருவாகும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார். பல ஆண்டுகளுக்கு மோகன்லால் - சந்தோஷ் சிவன் இணைந்து பணிபுரியவுள்ளனர்.

தான் நடித்து வரும் படங்களுக்கு இடையே, 'பரோஸ்' படத்தின் பணிகளையும் கவனித்து வருகிறார் மோகன்லால். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார் லிடியன் நாதஸ்வரம். மோகன்லால் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2021-ல் தொடங்கும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்