அப்பு இயக்கவுள்ள புதிய மலையாள படத்தில் நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.
2019-ம் ஆண்டு நிவின் பாலியுடன் 'லவ் ஆக்ஷன் டிராமா' என்ற படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. அதற்குப் பிறகு புதிதாக எந்தவொரு மலையாள படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். தற்போது அறிமுக இயக்குநர் அப்பு என்.பட்டாதிரி கூறிய கதை பிடித்துவிடவே, உடனே ஒப்பந்தமாகியுள்ளார்.
பல்வேறு படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் அப்பு என்.பட்டாதிரி. இவர் கேரள அரசின் சிறந்த எடிட்டருக்கான விருதினையும் வென்றவர். தற்போது 'நிழல்' என்ற புதிய படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் அப்பு என்.பட்டாதிரி.
இதில் குஞ்சாகோ போபன், நயன்தாரா இவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் 12 ஆண்டுகள் கழித்து இணைந்து நடிக்கவுள்ளனர். எர்ணாகுளம் பகுதிகளைச் சுற்றியே முழுப்படத்தையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
ஆண்டோ ஜோசப், அபிஜித் எம்.பிள்ளை, படுஷா, ஃபெலினி மற்றும் ஜினிஷ் ஜோஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் கதையை சஞ்சீவ் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவாளராக தீபக் டி.மேனன், இசையமைப்பாளராக சூரஜ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago