என்னை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டாம் - சிவசேனாவை சாடிய கங்கணா

By ஐஏஎன்எஸ்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் மும்பை போலீஸாரின் விசாரணை குறித்து நடிகை கங்கணா ரனாவத் குற்றம்சாட்டினார். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசையும் கடுமையாக விமர்சித்தார்.

இதனிடையே, மும்பையில் பாலி ஹில் பகுதியில் உள்ள அவரது பங்களாவில் அனுமதியின்றி கட்டுமானப்பணிகள் நடந்ததாகக் கூறி மாநகராட்சி நிர்வாகத்தினர் அந்த பங்களாவின் ஒரு பகுதியை இடித்தனர். இதனிடையே, கங்கனாவின் அவசர மனுவை ஏற்றுக்கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், கட்டிடத்தை இடிக்க தடைவிதித்தது. எனினும், தனது பங்களாவின் 40 % இடிக்கப்பட்டதாகவும் ரூ.2 கோடி நஷ்டஈடு கோரியும் கங்கணா மனு தாக்கல் செய்தார். இதை மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த சூழலில் நடிகை கங்கணாவும் அவரது சகோதரி ரங்கோலியும் மதரீதியான வெறுப்பை தூண்டுவதாக மும்பை காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரிக்குமாறு மும்பை போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கங்கணா மீது மும்பை போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று கங்கணா தான வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் சிவசேனாவை சாடியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

யாரெல்லாம் நவராத்திரி விரதம் இருக்கிறீர்கள்? இன்றைய கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் இவை. இந்த வேளையில் என் மீது ஒரு புதிய எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருக்கும் பப்பு சேனா என்னை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பதாக தெரிகிறது. என்னை அதிகம் மிஸ் செய்யவேண்டாம். விரைவில் அங்கு வந்து விடுவேன்.

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE