பார்வையாளர்கள் உண்மை கதாபாத்திரங்களையே பார்க்க விரும்புவதாக நடிகர் ராஜ்குமார் ராவ் தெரிவித்துள்ளார்.
ஹன்ஸல் மேத்தா இயக்கியுள்ள படம் புதிய ‘சலாங்’. இப்படத்தில் ராஜ்குமார் ராவ், நுஷ்ரத் பரூசா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அஜய் தேவ்கன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் தீபாவளி பண்டிகை என்று அமேசான் ப்ரைம் ஓடிடி-யில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் ராஜ்குமார் ராவ் ‘மோண்டூ’ என்ற உடற்கல்வி பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்து ராஜ்குமார் ராவ் கூறியுள்ளதாவது:
எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். நான் ஹர்யானாவில் தான் என்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தேன். இப்படி இந்த படத்தோடு ஏராளமான தொடர்புகள் எனக்கு இருக்கிறது.
» 'புத்தம் புதுக் காலை' குழுவினரைச் சாடியுள்ள நட்டி
» உங்கள் கனிவும், அன்புமே என்னை குணமடையச் செய்தது - மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தமன்னா நன்றி
பார்வையாளர்கள் உண்மை கதாபாத்திரங்களையே பார்க்க விரும்புகின்றனர். அதனால்தான் புதிய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களும், இயக்குநர்களும் உண்மையான மனிதர்களையும், கலாச்சாரங்களையும் பற்றிய படங்களை எடுக்கின்றனர். நீங்களும் உங்கள் வாழ்க்கையில் ‘மோண்டூ’ போன்ற ஒரு கதாபாத்திரத்தை நிச்சயம் பார்த்திருக்க முடியும். இது போன்ற கதைகள் தான் இப்போது மிகவும் தேவையாக இருக்கிறது.
ஹன்ஸல் மேத்தாவுடன் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 2011ஆம் ஆண்டு அவரை முதன்முதலில் சந்தித்தேன். அன்று முதல் நாங்கள் இருவரும் ஒன்றாக பணிபுரிந்து வருகிறோம். நான் அவரை மிகவும் மதிக்கிறேன்.
இவ்வாறு ராஜ்குமார் ராவ் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago