உயில் எழுதி வைக்காத சாட்விக் போஸ்மேன்: நீதிமன்றத்தை அணுகும் மனைவி

மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேன் இறப்பதற்கு முன்பு எந்தவிதமான உயிலையும் விட்டுச் செல்லவில்லை என்பதால், அவரது சொத்துகளை நிர்வகிக்க அவரது மனைவி டெய்லர் சைமோன் லெட்வர்ட், நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

'ப்ளாக் பேந்தர்' திரைப்படம் மூலம் உலகப் புகழ் பெற்றவர் போஸ்மேன். பெருங்குடல் புற்றுநோயால் கடந்த 4 வருடங்களாகவே அவதிப்பட்டு வந்த 43 வயதான போஸ்மேன் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி காலமானார். அவர் மரணத்துக்கு முன்பு, காதலி லெட்வர்டை ரகசியமாக மணந்தார். போஸ்மேனுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவதற்கு முன்பிலிருந்தே இருவரும் காதலித்து வந்தனர். கடந்த வருடம் திருமண நிச்சயமும் செய்து கொண்டனர்.

போஸ்மேனின் மரணம் குறித்து அறிவித்த அவரது குடும்பத்தினர், அவர் லெட்வர்டைத் திருமணம் செய்து கொண்டார் என்பதை உறுதி செய்ததோடு, வீட்டில் அவர் உயிர் பிரிந்தபோது குடும்பத்தினரும், மனைவியும் அவருடன் இருந்தனர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால், இறப்பதற்கு முன்பு போஸ்மேன் உயில் எதையும் எழுதி வைத்திருக்கவில்லை. இதனால் அவரது எஸ்டேட்டை நிர்வகிக்க, வரையறுக்கப்பட்ட அதிகாரம் வேண்டும் என்று அவரது மனைவி லெட்வர்ட், நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

போஸ்மேனின் எஸ்டேட் மதிப்பு 9,38,500 அமெரிக்க டாலர்கள் (ரூ.6.89 கோடி). மனைவி லெட்வர்டைத் தவிர, போஸ்மேனின் பெற்றோரைப் பற்றி மட்டுமே, குடும்ப உறுப்பினர்கள் என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE